இந்திய முறைப்படி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கும் உலக தலைவர்கள்

0 3027

கொரோனா தொற்று காரணமாக பரஸ்பரம் கைகுலுக்கி வந்த பன்னாட்டுத் தலைவர்கள் தற்போது இந்திய முறைப்படி இருகரம் கூப்பி தங்கள் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கைகுலுக்கியும், கன்னத்தோடு கன்னம் உரசி முத்தமிட்டும் பிறநாட்டு தலைவர்களை வரவேற்றனர். கொரோனா பரவலுக்குப் பயந்து வரவேற்பு முறையை மாற்றிக் கொண்டனர்.

சீனாவில் வூகான் நகரில் முழங்கைகளை இடித்துக் கொள்வதும், கால்களால் ஒருவருக்கொருவர் தட்டிக் கொள்வது என வணங்கிக் கொண்டாலும், தற்போது அவர்கள் இந்திய முறைப்படி இரு கரம் கூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதை பழகிக் கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கரை வரவேற்கும் போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றார்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஒரு முக்கியப் பிரமுகரை வரவேற்கும் போது கைகுலுக்க முனைந்தவர், திடீரென்று கைகளை விலக்கிக் கொண்டு கைகளை ஒன்று சேர்த்து கும்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் கை கூப்பி வரவேற்கவும், வணக்கம் தெரிவிக்கவும் தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர்.

இதே பாணியைத்தான் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் மன்னர் பிலிப்பை வரவேற்கும் போதும் பின்பற்றியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments