கையருகில் காதி கிராப்ட்... பராக்.. பராக்..

0 4956

நகரும் விற்பனை வாகனம் மூலம் சென்னையில் அத்தியாவிய பொருட்களின் விற்பனையை துவங்கியுள்ளது காதி கிராப்ட் ... அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் குடிசைத் தொழில் மூலம் எளிய மக்களின் உழைப்பினால் உருவான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய காதி கிராஃப்ட் தளம் அமைத்து கொடுக்கிறது.

நவீன காலமாற்றம் , மக்களின் தேவை ,தனியார் பெருநிறுவனங்களின் பெருக்கம் , கண்கவர் விளம்பரங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் அன்மையில் காதிகிராஃப்ட் போன்ற அரசு விற்பனை மையங்கள் மீது மக்களுக்கு நாட்டம் குறைந்து வருகிறது. மக்களிடையே காதிகிராஃப்டை கொண்டுச் சேர்க்கவும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் 'காதி கிராஃப்டின் நகரும் விற்பனை வாகனத்தை' கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது .

கைத்தறி துணி வகைகள், போர்வைகள் , பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை பை விசிறி , ஊதுபத்தி சாம்பிராணி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்கள் , ஜவ்வாது & கொல்லிமலை தேன், நாட்டுச்சக்கரை, பனங்கருப்பட்டி , சோப் , சாம்ப்பு , நறுமனப்பொருட்கள் , போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன . குறைந்த விலையில் , ஜிஎஸ்டி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

கொரோனா நோய் பரவி வரும் நிலையில் , இங்கு விற்பனை செய்யப்படும் இயற்கையான கை கழுவும் திரவம் (hand sanitizer) பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

இந்த விற்பனை வாகனத்தை மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பேருந்து , நிலையங்கள் , கடற்கரைகள் , சுற்றுலா தளங்கள் , போன்ற இடங்களில் சென்று நிறுத்தி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . இதனால் , குடிசைத்தொழிலில் உற்பத்தி ஆன பொருட்களை மக்களிடம் எளிதில் கொண்டுச் சேர்க்க முடியும் எனவும், காதி கிராஃப்ட் விற்பனை வருவாயும் அதிகரிக்கும் என்கின்றனர் அதிகாரிகள் .

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நாமே ஆதரிக்கவில்லையெனில், வேறு யார் ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்புபவர்களே பொருட்களை விரும்பி வாங்கிச்செல்கின்றனர்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments