பனியன் நிறுவனத்தில் இருந்து ஆடைகளை திருடிய வடமாநில இளைஞன் கைது

0 7040

திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் இருந்து டீ - சர்ட்களை திருடிச்செல்லும் வீடியோ வைரலான நிலையில், அந்த திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் மற்றும் திருட்டுக்கு உதவிய அவனது நண்பன் ஆகிய இரு வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பெருமாநல்லூர் அருகே உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைப் பார்த்த ஊழியர் ஒருவர் பணிமுடித்து வீடு திரும்பிய போது உடல் முழுவதும் பனியன்களை மறைத்து கொண்டு வந்தார். இவரை கண்டு சந்தேகமடைந்த நிறுவனத்தின் காவலாளி அவரது உடையை கழற்றி சோதனை செய்த போது திருட்டு அம்பலமானது.

நிறுவனத்தின் மேலாளர் தரப்பில் வந்த புகாரை தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட ராஜு மற்றும் அவனுக்கு உதவிய தில்லுபாய் ஆகிய இரு வடமாநில இளைஞர்களை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments