BP உள்ளவர்களுக்கு கொரானா ஆபத்தானது..!

0 1529

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என அதில் அனுபவம் வாய்ந்த சீன மருத்துவர் டு பின் (Du Bin) ரிவித்திருக்கிறார்.

பீகிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரப்பிரிவு இயக்குநராக இருக்கும் டாக்டர் டு பின், கொரானா தொற்றுக்கு ஆளாகும் வயதானவர்கள் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

அதே போன்று கொரானா தொற்று தீவிரமாகி மூச்சுத் திணறல் ஏற்படும் போது, நோயாளிகளின் தொண்டைப்பகுதியில் ஒட்டையிட்டு ஆக்சிஜன் குழாய்களை சொருகுதல் மிக அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலைக்கு வந்துவிடும் நோயாளிகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இறப்பது உறுதி என்றாலும், பல மணி நேரங்களுக்கு முன்னரே அவர்களுக்கு ஆக்சிஜன் குழாய்கள் சொருகப்பட்டால் உயிரைக் காப்பாற்றி விடலாம் என டாக்டர் டு பின் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments