எச்1பி விசாவில் பணிபுரிவோரின் இணைக்கு வழங்கப்படும் அனுமதி ரத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் என தகவல்

0 9292

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் பணிபுரிவோரின் இணையர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு அனுமதி ரத்து செய்யப்படுவதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட சிறப்பு உத்தரவின் அடிப்படையில் எச்4 விசா வைத்திருக்கும் கணவனோ மனைவியோ  ஒர்க்பெர்மிட் பெற்று சட்டபூர்வமாக பணிகளுக்குச் செல்கின்றனர். ஆனால் இந்த முறையை வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனால், வேலைவாய்ப்பு அனுமதி ஆவணங்கள் மூலம் பணியாற்றி வரும் இணையருக்கான அனுமதிக்கு கால நீட்டிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலை கேள்விக்குறியாக உள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்தில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments