இத்தாலியில் இந்திய மருத்துவ குழு..!

0 1160

இத்தாலியில் தவித்து வரும், இந்திய மாணவர்களை கொரானாவிலிருந்து பாதுகாக்கவும், சிகிச்சை அளிக்கவும், இந்திய மருத்துவ குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரானா பாதிப்பால், கொத்து கொத்தாக உயிரிழப்பை எதிர்கொண்டிருக்கும் தேசமாக இத்தாலி மாறி வருகிறது. அங்கிருந்து, தாயகம் திரும்ப முடியாமலும், கொரானா அறிகுறி இருந்தாலும் அதற்கான பரிசோதனை, சிகிச்சைகளை மேற்கொள்ள இயலாமலும், இந்திய மாணவர்கள் ஏராளமானோர், இத்தாலியில் தவித்து வருகின்றனர்.

இத்தாலியில் உள்ள இந்திய தூதர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் அடங்கிய குழு இத்தாலி நாட்டிற்குச் சென்றுள்ளது. ரோமில் உள்ள லியார்னாடோ டாவின்சி சர்வதேச விமான நிலைய வளாகம் அருகே முகாமிட்டு, இந்திய மாணவர்களுக்கு, இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments