அமைச்சர் தங்கமணியை பாராட்டிய துரைமுருகன்..!

0 9501

மின்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணிக்கு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில், அமைச்சர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்குப்பின் எழுந்து பேசிய துரைமுருகன், எவ்வித குறிப்புகளையும் பார்க்காமல், மிக அருமையாக பதிலுரை வழங்கியதாக தங்கமணியை பாராட்டினார்.

10 - வது முறையாக மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கமணி பதிலுரை வழங்கியதை அப்போது அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர்கள் தங்களின் துறையை முழுமையாக உள்வாங்கினால் மட்டுமே தெளிவாகவும், எந்த குறிப்புகளும் இல்லாமல் பேச முடியும் என்று துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments