மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்வு

0 3584

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4 விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இன்று, 4 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும்.

நிகழாண்டின் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிட்டு, அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments