மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது..!

0 9509

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டவருக்கு 67 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் அதன் தொடர்ச்சியாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கவும், கைது செய்யவும் உத்தரவிட்டனர். அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

உத்தரவை சாதகமாக்கிக் கொண்டு செயல்படாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டனர். மது போதையில் இயக்க அனுமதிக்காத பிரத்யேக கருவிகளை வாகனங்களில் பொருத்த உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments