திமுக ஆட்சியில் மதுபாட்டில்களில் திருக்குறளா அச்சிடப்பட்டிருந்தது..? தங்கமணி

0 1126

கடந்த 2006-2011ம் ஆண்டில் திமுக ஆட்சிகாலத்தில் மதுபான பாட்டில்களில் திருக்குறளா அச்சிடப்பட்டிருந்தது என அமைச்சர் தங்கமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என மதுபாட்டிலில் அச்சிட்டு அரசே விற்பதாக குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர், திமுக ஆட்சியின்போதும் மதுபாட்டில்களில் இதே வாசகம்தான் அச்சிடப்பட்டிருந்தது என்றார்.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விலக்கு குறிப்பு புத்தகத்தில், மதுபாட்டில்களில் தற்போதுள்ள மது - நாட்டுக்கு, வீட்டுக்கு,உயிருக்கு கேடு எனும் வாசகம், மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments