குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

0 777

குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்த ஐயப்பாடுகளை களையும் பொருட்டு இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக பழைய கட்டிடத்தின் 2 வது தளத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதில் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்கள் தவறாது கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments