உத்தரப்பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

0 425

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கொட்டியதால் பல ஏக்கரிலான பயிர்கள் சேதமடைந்தன.

அம்மாநிலத்தின் பிலிபிட்(pilibhit), சீதாபூர்(sitapur), சாண்டவுலி(chandauli), முசாபர்நகர்(Muzaffarnagar), பக்பத்(Bhagpat), பிஜ்நவுர்(Bijnaur), ஜான்பூர்(jaunpur) உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியதுடன், பல இடங்களில் சின்ன பளிங்கு கற்கள் அளவிற்கு ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.

மழையால் 2 பேர் உயிரிழந்த நிலையில், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments