பிரபல ரௌடி தணிகா காசியில் கைது !

0 768

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி தணிகாவை காசியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மறைந்த பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலனின் மைத்துனரும் ரவுடியுமான தணிகா மீது கொலை மற்றும் கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஸ்ரீதர் தனபாலனின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடிக்க அவனது ஆதரவாளரான தினேஷும் தணிகாவும் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டனர்.

இதனால் காஞ்சிபுரத்தில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் அரங்கேறி வந்தன. தனிப்படை போலீசார் கடந்த ஆண்டு நவம்பரில் தினேஷை நீலகிரி மாவட்டம் மசினகுடியில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் தணிகா உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் இருக்கும் ரகசிய தகவலைப் பெற்று, விமானம் மூலம் சென்று அவனை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments