தனியார் நிறுவன இயக்குனர்களிடையே துப்பாக்கிச்சூடு மோதல்

0 697

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவன போர்டு மீட்டிங் அரங்கில் இரண்டு இயக்குனர்களை துப்பாக்கியால் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர், துப்பாக்கியால் சுட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டார்.

டெலிலிங்க்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் தொழில் குறித்து பேசிக் கொண்டிருந்த போது கருத்து மோதல் வெடித்ததால் ஆத்திரமடைந்த பிரதீப் என்ற இயக்குனர் துப்பாக்கியை எடுத்து நரேஷ் குப்தா ,ராகேஷ் ஜெயின் ஆகியோரை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சுடப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments