மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுவில் கணக்கு காட்டியுள்ள சரத் பவாரின் தற்போதைய சொத்து மதிப்பு

0 828

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தனது சொத்து மதிப்பு கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 60 லட்ச ரூபாய் உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.

மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கூட்டணியில் அங்கம் வகித்துவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதில், தனது சொத்து விபரங்களை தெரிவித்துள்ள அவர், அசையும் சொத்துகளாக சுமார் 25 கோடியே 21 லட்ச ரூபாயும், அசையா சொத்துகளாக சுமார் ஏழரை கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக சுமார் 32 கோடியே 73 லட்ச ரூபாய் தன்னிடம் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அவரது சொத்து மதிப்பு, தற்போது சுமார் 60 லட்ச ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments