தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது - அமித்ஷா

0 958

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது என மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், சி.ஏ.ஏ. தொடர்பாக பொய்ப் பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது என முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சி.ஏ.ஏ. எவரின் குடியுரிமையையும் பறிக்காது என்றும் மாறாக குடியுரிமை வழங்கும் என்றும் கூறினார்.

டெல்லி கலவரத்துக்கு 2 நாட்கள் முன்னதாக சமூக வலைதளக் கணக்குகளை தொடங்கி பின்னர் செயலிழக்கச் செய்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதிக் கொண்டாலும் டிஜிட்டல் யுகத்தில் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீநிமன்ற நீதிபதி முரளிதர் பணியிடமாற்ற விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையே செயல்படுத்தப்பட்டதாகவும் அது வழக்கமான பணியிட மாற்றமே தவிர, அதை எந்த வழக்குடனும் தொடர்புடையது அல்ல என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments