பதவி விலகல் கடிதம் கொடுத்த 22 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராக அறிவிக்கை

0 652

பதவி விலகல் கடிதம் கொடுத்த 22 பேரும் வெள்ளியன்று நேரில் ஆஜராக வேண்டும் என மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் வரும் 16ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக கோரியுள்ளது. இந்நிலையில் பதவி விலகல் கடிதம் கொடுத்த 22பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப் பேரவைத் தலைவர் அறிவிக்கை அனுப்பியுள்ளார்.

இதனிடையே பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டுப் பெங்களூரில் தங்கியுள்ள 19பேரையும் சந்திக்க மத்தியப் பிரதேச அமைச்சர்கள் ஜித்து பட்வாரி, லக்கன் சிங் ஆகியோர் சென்றபோது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர்.

அப்போது அமைச்சர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்துத் தடுப்பு நடவடிக்கையாக அமைச்சர்கள் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments