தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பட்டாசு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறதா?

0 278

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதி ஆலைகளில் பட்டாசு தயாரிப்புக்கு தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடைகோரிய வழக்கில் பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அண்மையில் நடந்த வழக்கு விசாரணையில், தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால், அதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேட்டமலையில் உள்ள ஒரு ஆலையில் ஆய்வு செய்த அதிகாரிகள், ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments