எந்த நெருக்கடியாலும் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படவில்லை - கடம்பூர் ராஜு

0 595

எந்த நெருக்கடியாலும் ஜி.கே வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூரில் புதிய காவல் நிலையக் கட்டிடத்தில் போலீசாரின் பணி தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. எந்தக் கட்சியின் நெருக்கடிக்கும் ஆட்பட்டது இல்லை என்றும் இனியும் ஆட்படாது என்றும் கூறினார்.

கொரானா பாதிப்பால் கேரளாவைப் போன்று திரையரங்குகளை மூட வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments