தபால் துறையின் Digital Locker சேவை இந்தியாவில் துவக்கம்

0 609

இந்தியா போஸ்ட் இலவச டிஜிட்டல் லாக்கர் சேவையை தொடங்கி உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பார்சல் லாக்கர் சேவை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த வசதி, பதிவு செய்யப்பட்ட ஸ்பீட் போஸ்ட்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல்களை எளிய முறையில் சேகரிக்க பெரிதும் உதவுகிறது. மேற்கு வங்க வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பட்டாச்சார்யா இந்த சேவையை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நபதிகாந்தா தபால் அலுவலகத்தில் துவக்க உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த வசதி பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் பெறப்படும் பார்சல்களுக்கு பயன்படுத்தப்படும் என பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். போஸ்டல் பார்சல்களை தவிர்த்து, டிஜிட்டல் முறையை கொண்டு வர இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாக்கர் என் வழங்கப்பட்டு, பார்சல்கள் டிஜிட்டல் பார்சலில் வைக்கப்படும் எனவும், பார்சல்களைப் பெற வாடிக்கையாளர்களுக்கு OTP எண்ணுடன் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு,வாடிக்கையாளர் 7 நாட்களில் எந்த நேரத்திலும் பார்சலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments