திடீரென தீப்பற்றி எரிந்த போலீசாரின் ரோந்து வாகனம்

0 497

சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஜீப்பின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியான நிலையில் அதனைத் தொடர்ந்து மளமளவென தீ பற்றி எரிந்தது.

அருகில் மெட்ரோ ரயில் பணியில் இருந்தவர்களும், போலீசாரும் சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பின் நெருப்பை அணைந்தனர். எனினும் ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது.

ஜீப்பின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் தீயில் கருகியது. ஜீப்பின் பேட்டரியில் மின் கசிவால் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments