தங்கம் விலை 2வது நாளாக குறைவு

0 2662

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை, 33 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று 4 ஆயிரத்து 164 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 32 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 132 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று 33 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 256 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து 056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. பார் வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments