கொரானா பரவல் எதிரொலி.. பங்குச்சந்தைகள் வீழ்ச்சி..!

0 823

கொரானா வைரஸ் பாதிப்பு, விசா ரத்து, விமானப் போக்குவரத்து நிறுத்தம் ஆகியவற்றின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவலையடுத்து வணிகம், தொழில்துறை ஆகியவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சரிவு இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. 11 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 2612 புள்ளிகள் சரிந்து 33 ஆயிரத்து 85 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 745 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 713 ஆக இருந்தது. 2018 மார்ச் 26ஆம் தேதிக்குப் பின் நிப்டி பத்தாயிரம் என்கிற வரம்புக்குக் கீழ் சென்றது இதுவே முதன்முறையாகும்.

உலோகம், எண்ணெய், வங்கி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. எஸ் பேங்க், பாரத் பெட்ரோலியம், வேதாந்தா, கெயில், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் பத்து விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments