தெலுங்கு தேசம் நிர்வாகிகள் மீது YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்

0 496

ஆந்திராவில் ஜில்லா பரிஷத் தேர்தல் தகராறில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

குண்டூர் மாவட்டம் மாச்சர்லாவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் வேட்புமனுக்களை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பறித்து கிழித்து எறிந்ததுடன், அங்கு காரில் சென்ற தெலுங்கு தேசம் முன்னாள் எம்எல்ஏ போண்டா உமா, எம்.எல்.சி புத்தா வெங்கண்ணா ஆகியோரையும் வழிமறித்து தாக்கினார்கள்.

இதில் இருவரும் காயத்துடன் உயிர்தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுபோன்ற வன்முறையை பார்த்ததில்லை என்று தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments