Yes வங்கியில் பெறப்பட்ட கடன் அடைக்கப்படும்!!!

0 2744

யெஸ் வங்கியில் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்துவோம் என ரிலையன்ஸ் குழுமம் வாக்குறுதி அளித்துள்ளது.


யெஸ் வங்கியிடம் பெற்றுள்ள கடன் அனைத்தையும் உறுதியாக திருப்பி செலுத்துவோம் என அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. அனில் அம்பானி குழுமத்தின் 9 நிறுவனங்கள், இதுவரை யெஸ் வங்கியிடமிருந்து, 12,800 கோடி கடனாக பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த கடன்கள் அனைத்தும் வணிகப் போக்கில் பெறப்பட்ட கடன்கள் எனவும், இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழும சொத்துக்களை விற்பதன் மூலம் யெஸ் வங்கியின் கடன்கள் அனைத்தும் திருப்பி செலுத்தமுடியும் என அனில் அம்பானி உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments