ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை இரும்புக் கம்பியால் தாக்கிய மர்ம நபர்கள்

0 839

கோவையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுந்தராபுரம் நகரப் பொறுப்பாளரான சூரிய பிரகாஷ், மதுக்கரை மேம்பாலம் அருகே எண்ணெய்க் கடை வைத்துள்ளார். மாலை இவரது கடைக்கு தலைக்கவசத்துடன் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தாக்கியவர்கள் தப்பித்து ஓடிய நிலையில், காயமடைந்த சூரிய பிரகாஷ் கேஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments