வேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..! காட்டிக்கொடுத்தது சிசிடிவி

0 19730

தூத்துக்குடியில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டிற்குள் புகுந்து வேலைக்கார பெண்ணுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்த இளைஞருக்கு தர்ம அடி விழுந்தது. விசுவாசமில்லா வேலைக்கார பெண்ணால் நிகழ்ந்த விபரீதம் சிசிடிவி காட்சியால் வெளிச்சத்திற்கு வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தூத்துக்குடி சிபிசிஐடியில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சபீதா, இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இவர்களது வீட்டில் வேலைபார்த்து வந்த மாரியம்மாள் என்ற பெண், தன்மீது பெண் காவல் ஆய்வாளர் திருட்டு பழி சுமத்தியதாகவும், நியாயம் கேட்க வந்த தனது சகோதரர் சங்கரையும், தன்னையும் காவல் ஆய்வாளர் சபீதா தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக படுத்துக் கொண்டர். தனது சகோதரர் சங்கரை காவல் ஆய்வாளர் சபீதா தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

இதன் பின்னணி குறித்து காவல் ஆய்வாளர் சபீதாவிடம் விசாரித்த போது அவர் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலைக்காரி பார்த்துவந்த விபரீத வேலை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 7ந்தேதி காவல் ஆய்வாளர் சபீதா அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட , இரு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து மீண்டும் டியூசனுக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு மார்க்கமான வேலைக்காரியாகி உள்ளார் மாரியம்மாள்..!

முதலில் அங்கு நடக்க போகின்ற அசிங்கங்கள் சிசிடிவியில் பதிவாகி விடக்கூடாது என்று அதி புத்திசாலித்தனமாக சிசிடிவி மானிடரை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்..! பாவம், சிசிடிவி மானிட்டரை சுவிட்ச் ஆப் செய்தாலும் கேமராவில் காட்சிகள் பதிவாகும் என்பது மாரியம்மாளின் புத்திக்கு எட்டவில்லை..!

சற்று நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் தலையில் ஹெல்மெட்டுடன் முரட்டு ஆள் ஒருவன் வேலைக்காரியை தேடி வீட்டுக்கு வருகிறான். அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற வேலைக்காரப்பெண், சமையல் நுணுக்கங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதற்குள்ளாக புத்தகத்தை மறந்து விட்டு சென்றதாக கூறி பெண் காவல் ஆய்வாளரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். திருடனுக்கு தேள் கொட்டியது போல மிரண்டு போன வேலைக்காரி, அவனை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து அலைக்கழித்துள்ளார். அதற்குள்ளாக மாரியம்மாளுடன் ஆலோசனை நடத்தவந்த ஆபீசர் சமையலறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் சிறுவனை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

சிறுவன் புத்தகம் எடுத்து சென்ற பின்னர் மீண்டும் வேலைக்காரியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த அந்த முரட்டு ஆள் வெளியில் வந்து வேலைக்கார பெண்ணுக்கு சில காதல் முத்தங்களை பரிசளித்து விட்டு சென்றுள்ளார்.

தான் செய்த காதல் சேட்டைகள் யாருக்கும் தெரியாது என்று மாரியம்மாள் மகிழ்ந்திருக்க, புத்தகம் எடுக்கச் சென்ற சிறுவன், வீட்டு வாசலில் கழற்றிப் போடப்பட்டிருந்த காலணியை வைத்து, வீட்டிற்குள் வேறு யாரோ இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்து தனது பெற்றோரிடம் போட்டு கொடுக்க, அசிங்கங்களை காட்டிக் கொடுத்துவிட்டது சிசிடிவி..!

இதேபோன்று பல நாட்கள் அசிங்கங்கள் நடந்திருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் வேலைக்காரியை விசாரித்துள்ளார், அப்போது வீட்டிற்கு வந்து சென்றவர் சங்கர் என்றும் அவருடன் சேர்ந்து வீட்டில் இருந்து நகை-பணம் திருடியதும் தெரியவந்துள்ளது. போலீசில் வேலைக்காரி மீது புகார் அளிப்பட்டதை தெரிந்து கொண்ட வேலைக்காரியின் காதலன் சங்கர், பஞ்சாயத்து பேச, தனது ஆதரவாளர்களுடன் காவல் ஆய்வாளர் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கரை இழுத்து பிடித்து ஏறி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதா, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டி உள்ளார்

இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட வேலைக்காரப் பெண் மாரியம்மாள், அவரது காதலன் சங்கர் மீது திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா மட்டும் அங்கு இல்லையென்றால் காவல் ஆய்வாளர் சபீதா அராஜகப் பேர்வழியாக சித்தரிக்கப்பட்டிருப்பார் என்று கூறும் காவல்துறையினர், ஒரு வேளை வேலைக்காரியின் காதலனை, திடீரென வீட்டிற்குச் சென்ற சிறுவன் பார்க்க நேர்ந்திருந்தால் ஏதேனும் விபரீதம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சங்கரை தாக்கி காவல்துறை நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல் ஆய்வாளர் சபீதா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விசுவாசம் இல்லா வேலைக்காரர்கள் தொண்டைக்குள் நிற்கும் விஷத்திற்கு சமம் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments