அல் உம்மா தீவிரவாதியின் ஆட்கடத்தல் ஆய்வாளருக்கு அடி - உதை..!

0 1218

சென்னையில் நள்ளிரவில் கொடுக்கல் வாங்கல் தகராறில் காரில் கடத்திச் சென்ற நபரை விரட்டிப் பிடித்த காவல் ஆய்வாளரை தாக்கிய அல் உம்மா தீவிரவாதி ராஜா உசேன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் பைசுதீன் இவர் மதுரையை சேர்ந்த ராஜா உசேன் என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன்பு வியாபாரம் சம்மந்தமாக 10 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பணத்திற்கான வட்டியும் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் பைசுதீன் அலைகழித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு ராஜா உசேனுடன் மேலும் 4 பேர் சென்னை அண்ணா சாலைக்கு வந்துள்ளனர். அங்கு பைசுதீனை வரவழைத்து பணம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதை நேரில் பார்த்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக போலீசார் அந்த காரை பின் தொடர்ந்துள்ளனர். இதனிடையே சென்னை ராயப்பேட்டை மணி கூண்டு அருகே காரை நிறுத்தி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திருவல்லிக்கேணி ஆய்வாளர் மோகன்தாஸ் சுற்றி வளைத்து அவர்களை பிடிக்க முயன்ற போது, அவரை கீழே தள்ளி காலால் உதைத்து விட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பின் தொடர்ந்து வந்த காவல் துறையினர் கடத்தல் கும்பல் சுற்றி வளைத்து பிடித்தனர். கைதான கும்பலில் ராஜா உசேன் அல் உம்மா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன். 1995-ம் ஆண்டில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வைத்து தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவன். விளாத்திகுளம் ராஜகோபால் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி.

நேற்று குண்டு வெடிப்பு வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜா உசேன் ஆஜராகி விட்டு, தனது மகன் முகமது சைபுல்லா மற்றும் கூட்டாளிகளுடன் வந்து இந்த கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆட்கடத்தல் மற்றும் ஆய்வாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் ராஜா உசேன், முகமது சைபுல்லா, ரஹ்மதுல்லா, ஆசிப் கான், தவ்பிக் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments