கொரானா விழிப்புணர்வு காலர் டியூனுக்கு தடை விதிக்கக் கோரி மனு

0 792

கொரானா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு சார்பில், செல்போன் அழைப்பின்போது வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை கூறும் பதிவு ஒலிபரப்பப்படுகிறது.

இதை தடை செய்யகோரி தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எந்த ஒரு நபரையும் தொடர்பு கொள்வதற்கு முன்பு சுமார் 45 நொடிகள் இந்த விளம்பரப் பதிவை கேட்க வேண்டியதுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments