பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல்?

0 4018

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல், மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மகாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளது.

கொரானா அச்சுறுத்தல் நிலவுவதால், நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவிவருகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து  அம்மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்காமலும் அவர்கள் யாரையும் மைதானத்திற்குள் அனுமதிக்காமலும் மும்பையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது. டிவி, இணையதளம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments