சோனியாவின் பாட்டனார் முசோலினியின் படைவீரர் - மீனாட்சி லேகி

0 812

சோனியாகாந்தியின் பாட்டனார் முசோலினியின் படையில் பணியாற்றியவர் என மக்களவையில் பேசிய பாஜகவின் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜகவின் செயலற்ற தன்மையால் வன்முறை 3 நாட்களுக்கு நீடித்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

டெல்லி எரிந்துகொண்டிருந்தபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்துகொண்டிருந்தார் எனவும் கேள்வி எழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாஜகவின் மீனாட்சி லேகி, தீவைத்துக் கொளுத்துவதில் சிலர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாகக் காங்கிரசை மறைமுகமாகச் சாடினார். 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர் முதலமைச்சராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments