சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை - SBI

0 3212

எஸ்.பி.ஐ. வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியில் 44 கோடியே 51 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இவற்றில் பெருநகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 3 ஆயிரம் ரூபாயும், நகர்ப்புற வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாயும் கிராமப்புற வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

குறைந்த பட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களுக்கு அபராதமாக 5 ரூபாய் முதல் 15 ருபாய் வரை வரியுடன் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பின் மூலம் இனிகுறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என எஸ்.பி.ஐ கூறியுள்ளது.

இதனிடையே 1 லட்சம் ரூபாய் வரையான முதலீடுகளுக்கு எஸ்.பி.ஐ.யின் ஆண்டு வட்டி விகிதம் 3.5 சதவீதமாகவும், அதற்கு மேல் 3 சதவீதமாகவும் இருந்த நிலையில் தற்போது அனைத்து மட்டத்திலும் 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments