கொரோனா பாதிப்பு குறித்த தினசரி தகவல்களால் மக்களிடையே பீதி.. மருத்துவ சங்கம்

0 650

உலகம் முழுவதும் கொரோனாவின் கொட்டம் தொடரும் நிலையில், நாள்தோறும் பகிரப்படும் அல்லது வெளியாகும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் பீதியை உருவாகியுள்ளதாக மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், உயிர்கொல்லி வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தினசரி வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வது நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை குறைக்க தொற்றுநோயின் தரவுகளை வகைப்படுத்தவும், துல்லியமான மருத்துவ நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் இநுணுக்கமான மற்றும் சீரான அணுகுமுறை மிகவும் பொருத்தமானதே என அச்சங்கம் கூறியுள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தில் கை சுகாதாரத்தை சேர்க்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பொதுமக்களுக்காக 24 மணி நேர உதவி மையங்களை அமைக்கும் முன்னேற்பாட்டில் இந்திய மருத்துவ சங்கம் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments