ஆட்சி கலைப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து பெட்ரோல் விலையை குறைப்பீர்களா... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

0 710

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கலைப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைவை பயன்படுத்தி பெட்ரோல் விலையை குறைப்பீர்களா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடியை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மத்தியப் பிரதேச மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைப்பதில் தீவிரம் காட்டி வரும் தாங்கள், கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் குறைந்திருப்பதை கவனிக்க தவறியிருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கும் கீழ் குறைப்பீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அது சரிவிலிருக்கும் பொருளாதாரத்தை மீட்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments