மதுரை - புனலூர் ரயிலை விரைவு ரயிலாக மாற்ற தெற்கு ரயில்வே முடிவு

0 649

மதுரை - புனலூர் இடையே இயங்கும் பயணிகள் ரயில் வரும் ஜூலை மாதம் முதல் விரைவு ரயிலாக மாற்றப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் முன்பதிவு வசதிகொண்ட ஒரே பயணிகள் ரயிலாக மதுரை - புனலூர் பயணிகள் ரயில் உள்ளது. 410 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும் இந்த ரயிலை விரைவு ரயிலாக மாற்ற ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

அதன்படி மதுரை - புனலூர் பயணிகள் ரயில் ஜூன் 30ஆம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றப்படும். இந்த ரயில் மதுரையில்இருந்து இரவு பதினொன்றேகால் மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை பத்தேமுக்கால் மணிக்குப் புனலூர் சென்றடையும்.

இதேபோல், ஜூலை 1 முதல் புனலூர் - மதுரை பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்படுகிறது. இந்த ரயில் புனலூரில் இருந்து மாலை நாலரை மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு மதுரைக்குச் சென்று சேரும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments