3 ஆண்டுகளில் ரூ. 547 கோடி இணையத்தள மோசடி..!

0 706

இணையத்தள மோசடிக்காரர்கள் 3 ஆண்டுகளில் 547 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

2019 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 92 நாட்களில் மட்டும் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை, இணைய வங்கிச்சேவை ஆகிய வழிகளில் மோசடி நடைபெற்றதாக 21 ஆயிரத்து 41 புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை 128 கோடி ரூபாய் ஆகும். 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இணையத்தள மோசடி மூலம் 101 கோடி ரூபாய் பறிபோயுள்ளது.

2017 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரையுள்ள 3 ஆண்டுகளில் இணையத்தள மோசடி மூலம் மொத்தம் 547 கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர். இந்த மூன்றாண்டுகளில் இணையத்தள மோசடி தொடர்பாக மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments