உலகில் எச்.ஐ.வி யை வென்ற 2வது நபர்..!

0 2798

உலகில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 40 வயதான ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo) எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த 30 மாதங்களாக நலமுடன் வாழ்வதாக மருத்துவ இதழான லான்செட் (The Lancet) தெரிவித்துள்ளது.

இந்த நபருக்கு எச்.ஐ.வி. இருப்பது கடந்த 2003 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக நீண்ட காலம் மருந்து மாத்திரைகள் எடுத்து குணமடைந்த அவருக்கு கடந்த ஆண்டு கூடுதலாக எலும்பு மஜ்ஜை அறுவை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

எச்.ஐ.வி.யில் இருந்து முதன்முதலாக குணமான ஜெர்மன் நபர் தமோத்தி பிரவுனுக்கும் (Timothy Brown) கடந்த 2007 ல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நலமுடன் உள்ளார். அதே சமயம் எல்லா எச்.ஐ.வி. நோயாளிகளுக்கும் இந்த மாற்று சிகிச்சை பலன் தராது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக (University of Cambridge) மருத்துவ நிபுணர் ரவீந்திர குமார் குப்தா தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments