எஸ்கேப் ஆக நினைத்த யெஸ் வங்கி ராணா கபூர்.. முறியடித்த அமலாக்கத்துறை..!

0 2863

யெஸ் வங்கி முன்னாள் தலைவர் ராணா கபூர், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் திட்டத்தின் முன்னோடியாக தமது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்க முயன்றதை அமலாக்கப்பிரிவு முறியடித்துள்ளது.

டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர பங்களாக்கள் உள்ளிட்ட இந்த சொத்துக்களின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இவை ராணா கபூரின் மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த சொத்துக்களை விற்றுத் தருமாறு சில ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் ராணா கபூர் கேட்டுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும், மும்பையில் உள்ள தமது சொத்துக்களையும் விற்ற பணத்துடன் பிரிட்டன், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் செட்டில் ஆக ராணாகபூர் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களைத் திரட்டியுள்ள அமலாக்கத்துறை ராணா கபூருக்கு தொடர்புடைய சொத்துக்களின் மீதான கண்காணிப்பை இறுக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments