பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டவர்களுக்கு விசா சேவை ரத்து

0 1314

பிரான்ஸ் , ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே விசா வழங்கப்பட்டுள்ளவர்கள் இன்று இரவுக்குள் இந்தியாவுக்கு வராவிட்டால் அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இணைய வழி விசாக்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாக்களை கைவசம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள், அருகில் இருக்கும் வெளிநாட்டு மண்டல பதிவு அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விசாக்களை நீட்டிப்பது, மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக மத்திய அமைச்சக செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா, ஹாங்-காங், தென்கொரியா, ஜப்பான், இத்தாலி , தாய்லாந்து, சிங்கப்பூர் ,ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் தாமாக 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments