கொரோனா: இருண்டு போன இத்தாலி..!

0 3161

இத்தாலியில் கொரோனாவின் தாக்குதலுக்கு ஒரே நாளில் 168 உயிரிழந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் முடங்கிப் போய் உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் தனது கொலைக்கரத்தை நீட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டு அரசையும், மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு மிகுந்த பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை உத்தரவு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் கூடுவது மற்றும் பொது இடங்களை திறந்து வைப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், உணவகங்கள், மதுபானக் கூடங்களை மாலை 6 மணிக்குள் மூடிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்கு திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாடு முழுவதும் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதனிடையே இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள புக்லியா சிறையில்ர கொரோனாவைக் காரணம் காட்டி தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிக்கி 6 கைதிகள் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments