500 ரூபாய் கொடுத்தால் ஆவேசமா பேசுவோம்..! பைசா போராளி பரிதாபம்

0 34488

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர் ஊராக சென்று மேடைகளில் நெஞ்சுவிடைக்க பேசிய போராளி ஒருவர், கூட்டத்துக்கு 500 ரூபாய் வாங்கிக் கொண்டு வயிற்றுப்பிழைப்புக்காக ஆவேசம் காட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பைசா போராளியின் பரிதாப நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் வாலண்டியராக சென்று மத்திய அரசையும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்சையும் வார்த்தைகளால் வருத்தெடுத்து நெஞ்சுவெடைக்க முழங்கி வந்தவர் நெல்லையை சேர்ந்த பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன்..!

கலப்பு திருமணம் செய்து கொண்டதாக மார்தட்டும் பஞ்ச் பாலமுருகன் மேடை தோறும் ஒரு மதத்திற்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, குடியரசு தலைவர், பிரதமர், மாற்று மதத்தவர்கள், பிற சாதியை சேர்ந்தவர்கள் என பலரையும் வாய்க்கு வந்தபடி வரைமுறையில்லாமல் வம்புக்கு இழுத்து வந்தார்.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் பேசிய கருத்து தொடர்பான விசாரணைக்காக, அய்யாவழி பாலமுருகனை ஆபீஸ் ரூமுக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் சிறப்பாக கவனித்ததாக கூறப்படுகின்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த பாலமுருகன், தான் வயிற்றுப்பிழைப்புக்காக கூட்டத்துக்கு 500 ரூபாய் பெற்றுக் கொண்டு மேடைகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேசியதாக, தன்னுடைய பேச்சுக்கு தானே மறுப்பு தெரிவித்து தன்னிலை விளக்க வீடியோ வெளியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

காவல் துறையினரின் மிரட்டலுக்கு பயந்து, பஞ்ச் பாலமுருகன், பஞ்சர் பாலமுருகனாகிவிட்டதாக எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அரசின் அறிவிப்புகளுக்கு எதிராக போராடவும், கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், கையில் மைக் கிடைத்ததும், கையை நீட்டி சவால்விட்டு பிரிவினையையும், கலவரத்தையும் தூண்டும் விதமாக, வாயில் வருவதை எல்லாம் பேசினால் வம்பாகி விடும் என்பதை சம்பந்தப்பட்ட போராளிகள் உணரவேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments