தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லை.. ஒற்றை நபரும் குணமானார்..!

0 1673

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரே ஒரு நபரும் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், கொரானாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஒற்றை நபரும் குணமடைந்தார் என்றும், இது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

#Corona update: a good news for Our state, the Pt undergoing treatment at #RGGH is tested negative for Corona,this speedy recovery is possible only because of the meticulous treatment & expertise of #TNHealth to handle exigencies. As of now, #TN is CORONA FREE. #CVB @MoHFW_INDIA

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 10, 2020 ">

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால், அந்த நபர் விரைவாக குணமடைந்துள்ளார் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments