காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் என புகார்

0 6643

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறி, அதை செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

உடன்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ் எனும் நபர், 17 வயது கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் இருந்ததாகவும், அதை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி அவருடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனாலும் அம்மாணவியை விடாத தினேஷ், புகைப்படத்தை காட்டி மிரட்டியதுடன், ரவி என்பவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால்
ரவி என்கிற நபரும் மாணவியிடம் தவறான நோக்கத்துடன் பேச ஆரம்பித்துள்ளார். இதையடுத்து மாணவி தரப்பு அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷை கைது செய்து, தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments