ரூ 545 கோடி பூரி ஜகன்னாதர் முதிர்வுத் தொகையை தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை

0 706

யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பூரி ஜகன்னாதர் ஆலயத்தின் நிதியை விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா நிதியமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

யெஸ் வங்கியில் ஜகன்னாதர் ஆலயம் சார்பில் 545 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது யெஸ் வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் மார்ச் 2020ல் முதலீடுகள் செய்த பணம் முதிர்வு அடைகிறது.

இதனை மறுபடியும் முதலீடு செய்யாமல் பணத்தைத் திரும்பப் பெற ஒடிசா ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதியமைச்சருக்கு ஒடிசா அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி எழுதிய கடிதத்தில் ஆலய நிர்வாக முதலீட்டை திரும்ப எடுக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments