மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்பு பேரணி

0 215

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்பெயினில் நடைபெற்ற பேரணியில் ஆயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாலின வன்முறையைக் கண்டிக்கும் ஊதா நிற பலூன்கள், பேனர்கள் மற்றும் பதாகைகளை போன்றவற்றை ஏந்தியவாறு பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர். மேலும், இசைக்கலைஞர்கள் இசை வாத்தியங்களை வாசித்தவாறும், பெண்களை ஊக்குவிக்கும் முழக்கங்களை எழுப்பியவாறும் பேரணியில் ஈடுபட்டனர்.

பிரான்சில் நடைபெற்ற பேரணியிலும் திரளான பொதுமக்கள் பங்கு பெற்றனர். இதில் நீல நிற உடைகளையும் மஞ்சள் நிற கையுறைகளையும் அணிந்த குழுவானது பொதுமக்களின் மத்தியில் உற்சாகமுடன் நடனமாடி அசத்தினர்.

மேலும், நடனத்தின் போது பெண்கள் சம உரிமை தொடர்பான முழங்களையும் அவர்கள் பாடலாக பாடினர்.

ஜெர்மனின் பெர்லின் நகரின் முக்கிய சாலைகளில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் கொடுமைகளை கண்டித்து பதாகைகள் மற்றும் பேனர்கள் போன்றவை ஏந்திச் செல்லப்பட்டன.

பேரணியில் பாலின சமத்துவம் வலியுறுத்தப்பட்டதோடு, ஆண்களும் பெண்ணியவாதியாக இருந்து செயல்படலாம் என்பது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன,

இதேபோன்று, ஈராக்கில் நடைபெற்ற பேரணியில் இசைக் கருவிகளை வாசித்தவாறும் பாடல்களை பாடியவாறும் ஏராளமானோர் கலந்துகொண்டதால் பேரணி களை கட்டியது.

ஈராக்கின் மாற்றத்திற்கான ஆண்களின் போராட்டத்தில், பெண்கள் முழு ஆதரவு கொடுப்போம் என்பது போன்ற முழக்கங்களை பேரணியில் சென்றவர்கள் எழுப்பினர்.

கொரானா அச்சுறுத்தலால் முகமூடியை அணிந்து கொண்டு பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் தேசிய கொடியையும் ஏந்தி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments