டேட்டா கட்டணத்தை உயர்த்த டிராய் அமைப்பிடம் ஜியோ கோரிக்கை

0 2083

ஒரு ஜிபி டேட்டா கட்டணத்தை 20 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று  டிராய் அமைப்பிடம் ஜியோ கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் தரப்பில் டிராயிடம் சமர்பிக்கப்பட்ட திட்டத்தில், ஒரு ஜிபி டேட்டா கட்டணத்தை 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் சமர்ப்பித்த திட்டத்தில் அடுத்த 6 மாதம் முதல் 9 மாதங்களில் 2 முதல் 3 முறையாக கட்டணத்தை 20 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

குரல் அழைப்புக்கான கட்டணத்தில்  மாற்றம் செய்வது மக்களை பாதிக்கும், அதை செயல்படுத்துவது கடினம் என ஜியோ தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments