விசாரணை என்ற பெயரில் போலீசார் கொடுமை? முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தற்கொலை முயற்சி

0 585

ஆந்திர மாநிலத்தில் போலீசார் கொடுமைப்படுத்துவதாகக் கூறி முன்னாள் ஊராட்சித் தலைவர் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் எஸ்.எம்.புரம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சவுத்ரி அவினாஷ். அவர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அவரை விலக்கி விட்டு கோவில் பணிகளை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த சஞ்சய் ராணி என்பவர் மேற்கொள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் போலீசார் அவினாஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் அவினாஷ் காவல்நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

படுகாயமடைந்த அவினாஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments