ஜோடியைத் தேடி 2000 கி.மீ. தூரம் அலைந்து திரியும் புலி

0 27379

 பெண்துணையைத் தேடி ஒரு புலி சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவற்றின் உடலில் ரேடியோ கருவி பொருத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் கண்காணித்து வந்ததில் ஒரு புலி மட்டும் வயல்கள், மலைகள், காடுகள், ஆறுகளைக் கடந்து தன் இணையைத் தேடி அலைந்து திரிவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலி சென்ற வழித்தடத்தின் வரைபடத்தையும் அந்த வனத்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.பகலில் ஓய்வெடுத்து ,இரவில் அந்த புலி நடந்து சென்றதாகவும் இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அந்த வனத்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.

This #Tiger from India after walking into records has settled to Dnyanganga forest. He walked for 2000 Kms through canals, fields, forest, roads & no conflict recorded. Resting in daytime & walking in night all for finding a suitable partner. Was being continuously monitored. pic.twitter.com/N1jKGXtMh2

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 5, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments