நள்ளிரவில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

0 689

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, நள்ளிரவு பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை கணபதியில் ரூட்ஸ் கம்பெனி எதிரில் வேதம் பால் நகரில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் நள்ளிரவு ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசியதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு பெட்ரோலுடன் உடைந்த பீர் பாட்டில் மற்றும் திரி கிடந்ததை கைப்பற்றினர். நேற்று சிஐஏக்கு ஆதரவாக பேசிய இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் தாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்து இருப்பதால், மர்ம நபர்கள் பற்றி தனிப்படை அமைத்தும்,சிசிடிவி பதிவுகளை ஆயுவு செய்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களிலும், முக்கிய இடங்களிலும் போலீசாருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments