மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண் மீது லாரி ஏறிய சிசிடிவி காட்சி

0 1172

சென்னை அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண் மீது லாரி ஏறியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

அத்திப்பட்டு   ஐ.சி.எப். காலனி செல்வியம்மன் நகரை சேர்ந்த 60 வயதான சேட்டு, தனது மனைவி சகுந்தலாவுடன் மோட்டார் சைக்கிளில்  அயப்பாக்கத்துக்கு நேற்றிரவு சென்றார். அப்போது திடீரென குறுக்கே வந்த வந்த மற்றோரு மோட்டார் சைக்கிளை கண்டதும் சேட்டும், பின் இருக்கையில் இருந்த சகுந்தலாவும் நிலைதடுமாறி  சாலையில் விழுந்தனர்.

அந்நேரத்தில் பின்னால் வந்த லாரியின் பின்சக்கரம் சகுந்தலா மீது ஏறி இறங்கியதில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு,  போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments